கடந்த மாதம் பணவீக்‍கம் 5.09% ஆக இருந்தது : அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வால் பாதிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாட்டில் கடந்த மாதம் பணவீக்‍கம் 5.09 சதவீதமாக இருந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நுகர்வோர் விலை குறியீட்டு எண் அளவின்படி இந்த ஆண்டு ஜனவரி மாதம் பணவீக்‍கம் 5 புள்ளி ஒன்று ஆக இருந்தது. ஆனால் கடந்த மாதம் பிப்ரவரியில் அத்தியாவசியப்பொருட்களின் விலைகள் சற்று உயர்ந்துள்ளன. இதனால் பிப்ரவரி மாத பணவீக்‍கம் 5.09 சதவீதமாக இருந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.  நடப்பு ஆண்டு மார்ச் மாதம் வரையிலான முதல் காலாண்டில் பணவீக்‍கம் 5 சதவீதமாக இருக்‍கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இம் மாதம் பணவீக்‍க விகிதம் 5.5 சதவீதமாக இருக்‍கும் என பொருளாதார வல்லுநர்களின் கணித்துள்ளனர்.

Night
Day